இலங்கை
யாழ் நல்லூரில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த கடலென ஒன்று திரண்ட உறவுகள்

யாழ் நல்லூரில், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில், உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து, மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு யுத்தத்தில் உயிர் நீர்த்த மறவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
