இலங்கை

இலங்கையில் தக்காளி திடீரென விலை உயர்வு

இலங்கையில், கரட் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து தக்காளியின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மேற்கோள்காட்டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விலை அதிகரிப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி பயிர் நாசமடைந்துள்ளது.

எனவே பசுமைக்குடில்களில் பயிரிடப்பட்ட மரக்கறி பயிர்களே இந்நாட்களில் சந்தைக்கு எனவே பசுமைக்குடில்களில் பயிரிடப்பட்ட மரக்கறி பயிர்களே இந்நாட்களில் சந்தைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Back to top button