இலங்கை
யாழ் பண்ணை பகுதியில் வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்த முச்சக்கரவண்டி; மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி கடலுக்குள் பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று மதியம் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போது இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியே வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட ஐவர் பயணித்த நிலையில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பெண்களும் ஒரு குழந்தையும் இந்த விபத்தில் படு காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.