இலங்கை
பொதுமக்களுக்கு காலநிலை மாற்றம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமேற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிடுகிறது.
இந்நிலையில் நாட்டை சுற்றியுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தொடர்ந்தும் நீடிப்பதால் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.