இலங்கை
இன்று முதல் கொழும்பு தாமரைக் கோபுரத்தில் சாகச விளையாட்டு: குவியும் பொதுமக்கள்
தெற்காசியாவின் மிக உயரமான கொழும்பு தாமரைக் கோபுரத்தில் மற்றுமொரு சாகச விளையாட்டு நிகழ்வு இடம்பெறுகின்றது. குறித்த சாகச விளையாட்டு நிகழ்வானது இன்று (18.11.2923) தாமரைக் கோபுரத்தில் நடைபெற்றுவருகின்றது. விங்சூட் பேஸ் ஜம்பிங் (wingsuit Base Jumping) எனப்படும் சாகச விளையாட்டு நிகழ்வானது இரண்டாவது தடவையாக இடம்பெறுவதாக தாமரைக்கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறித்த சாகச நிகழ்வில் ஈடுபடுபவர்கள் தாமரைக்கோபுரத்தின் 29 ஆவது மாடியிலுள்ள கண்காணிப்புக் கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்து கோபுர வளாகத்தின் நிலத்தை அடைவார்கள். ஆறு பேர் பங்குபற்றிய இந்த நிகழ்வில், முதலாவதாக குதித்த நபர் கோபுர வளாகத்தில் நிலத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வைக் காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தந்த வண்ணம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.