வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

இலங்கையில் தொடர்ந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் இடம்பெறும் மோசடி நடவடிக்கைகளை தொடர்ந்து வெளிநாட்டு வேலை வாய்ப்பினை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அறிக்கை ஒன்றினை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ளது.
குறித்த அறிக்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான முகவர் நிறுவனங்களுக்கு பணம் மற்றும் கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் தகவல்களைப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் , 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 24 மணித்தியால தகவல் நிலையத்தைத் தொடர்புகொள்ளலாம் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட முகவர் நிலையத்தின் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.