ஆன்மிகம்

உங்களுடைய வேண்டுதல் முழுமையாக நிறைவேற இதனை செய்தால் போதும்!

பொதுவாக தினந்தோறும் இறைவழிப்பாட்டில் ஈடுபடும் அனைவரும் கடவுளிடம் ஏதாவதொரு வேண்டுதலை முன்வைப்பதுண்டு.

அவ்வாறு நாம் வேண்டிக்கொள்ளும் விடயம் முழுமையாக நிறைவேற வேண்டுமெனின் சிறிய விடயத்தை மாத்திரம் கடைப்பிடித்து வந்தால் போதும். இந்துக்களின் வழிப்பாட்டு முறைகளில் விளக்கேற்றுதல் என்பது அடிப்படையான விடயம் ஒன்றாகும்.

தினந்தோறும் நாம் வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றுவதால் குடும்பத்தில் வளர்ச்சியையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்தும் என்பார்கள்.

சாதாரணமாக நாம் கடவுளை வழிபடுவதை விட விளக்கேற்றி வைத்து வழிபடும் போது அதன் பலன் இரு மடங்காக அதிகரிக்கும். அவ்வாறு விளக்கேற்றும் போது நம்முடைய நம்முடைய வேண்டுதல்களை சொல்லி விளக்கேற்றுவோம்.

அந்த வேண்டுதல் நிறைவேற சில முக்கிய விஷயங்களை பின்பற்றினாலே போதும். விளக்கேற்ற சரியான நேரம் காலையில் விளக்கேற்றும் போது பிரம்ம முகூர்த்தம் எனப்படும் 04.30 முதல் 06.00 மணி வரையிலான நேரத்திற்குள் விளக்கேற்ற வேண்டும்.

அதே போல் மாலையில் 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள்ளாக விளக்கேற்றி வழிபட வேண்டும். வீட்டில் உள்ள மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருந்தாலும், நீங்கள் பிரம்ம முகூர்த்த வேளையில் கண் விழித்தால் வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபடலாம்.

தினமும் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து விளக்கேற்ற முடியாவிட்டாலும், வாரத்தில் ஒரு நாளை இதற்கென ஒதுக்கி விடுங்கள். அந்த நாளில் மட்டுமாவது தவறாமல் காலையில் எழுந்து விளக்கேற்றுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

வீட்டில் விளக்கேற்றும் போது, நம்முடைய வாழ்க்கை, நம்முடைய குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் மற்றும் நம்முடைய வேண்டுதல் என்ன என்பதை கூறி அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும்.

அத்தோடு இந்த உலகத்தில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். அனைவரின் மனக்குறைகளும் நீங்க வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி மற்றவர்களின் நலனுக்காக நாம் மனதார வேண்டிக் கொள்ளும் போது நம்முடைய வேண்டுதல்கள் விரைவில் நிறைவேற இறைவன் அருள் புரிவார்.

பொதுவாக பிரம்ம முகூர்த்த வேளையில் நாம் என்ன வேண்டிக் கொள்கிறோமோ அது நிச்சயம் நிறைவேறும் என்பார்கள்.

அதிலும் இந்த மந்திரத்தை சொல்லி நம்முடைய வேண்டுதல்களை முன்வைத்து விளக்கேற்றும் போது, நம்முடைய வேண்டுதல்கள் வேண்டிக் கொண்ட படியே விரைவில் கைகூடும்.

Back to top button