இலங்கை

பம்பலப்பிட்டி வீதியில் இரண்டு பேருந்துகள் மோதி ஏற்பட்ட விபத்து

பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் இரண்டு பேருந்துகள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த பேருந்தும், கொழும்பில் இருந்து கல்கிஸ்ஸ நோக்கி பயணித்த பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று திடீரென பிரதான வீதியில் புகுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button