இலங்கை

கதிர்காமம் – செல்லகதிர்காமம் வீதியில் இடம்பெற்ற விபத்து

நேற்று இரவு (28.01.2024) கதிர்காமம் – செல்லக் கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வேன் ஒன்றும் லொறியொன்றும் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் வேனில் பயணித்த மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். உயிரிழந்தநபர் வேனில் பயணித்தவர் எனத் தெரிவிக்கும் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button