இலங்கை

நாட்டில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் மோசடி குறித்து நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

இலங்கையில், கடந்த ஆண்டுகளில் வெளிநாடு செல்வதற்காக ஏழு வருட விடுமுறை எடுத்து உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 90% ஆனோர் உள்நாட்டிலேயே பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விடுமுறை எடுத்துள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இலங்கையில் வேறு பணிகளைச் செய்து வருவதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில், 2020-2023 ஆம் ஆண்டு வரையிலான தகவல்களை ஆராய்ந்ததில் இந்த உண்மைகள் தெரியவந்ததாக எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த வருடங்களில் வெளிநாடு செல்வதற்காக விடுமுறை எடுத்தவர்கள் ஏழு பேரைத் தவிர வேறு எவரும் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக வாரியாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் 80, பேராதனையில் 41, ஜயவர்தனபுர 35, களனி 54, திறந்த பல்கலைக்கழகத்தில் 17, ருஹுணு பல்கலைக்கழகத்தில் 81 என 90% பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஏழு வருட விடுமுறை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

Back to top button