தினமும் ஒரு ஆப்பிள் ; இவ்வளவு பயன் இருக்கா?
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்ற கருத்தை அனைவருமே கேள்வி பட்டிருப்போம்.
ஏனெனில் ஆப்பிளில் அந்த அளவில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் என்று உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
அத்தகைய சத்துக்கள் உடலை வலுவோடு வைப்பதுடன், எந்த நோயும் உடலைத் தாக்காத வகையில் நோயின்றி ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.
அதனால் தான், நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கச் செல்லும் போது, ஆப்பிளை வாங்கிச் செல்கின்றனர். ஒரு ஆப்பிள் எத்தனை நோய்களை குணப்படுத்தும் என்பதை பற்றி பார்ப்போம்.
உயர் இரத்த அழுத்தம்
பொட்டாசியம் அதிகம் உள்ள ஆப்பிளில் உள்ளது. இந்த சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். எனவே இதனை உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சாப்பிட்டால் நல்லது.
புற்றுநோய்
ஆப்பிளில் உள்ள ஃப்ளேவோனாய்டுகளான க்யூயர்சிடின், நுரையீரல், மார்பகம் மற்றும் குடல் போன்றவற்றில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.
வலுவான எலும்புகள்
ஆய்வுகளில் ஆப்பிளில் உள்ள ஃப்ளேவோனாய்டான ஃப்ளோரிட்ஜின் இருப்பதால், அவை இறுதி மாதவிடாய்க்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் எலும்புப்புரை ஏற்படுவதை தடுத்து, எலும்புகளை வலுவடையச் செய்யும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே பெண்கள் ஆப்பிளை அதிகம் சாப்பிட வேண்டும்
கண்புரை
ஆப்பிளை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
நீரிழிவு
இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. எனவே நீரிழிவு உள்ளவர்கள், இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.
கெட்ட கொலஸ்ட்ரால்
ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.