இலங்கை

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

இம்மாதம் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தீர்மானித்துள்ளார். எலும்பு, தசை, நரம்பு பிரச்சினைகள் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம் செலுத்த முடியுமானால் பரிந்துரையின் பேரில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தில் உள்ள தடைகளை நீக்குமாறு கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சாதாரண சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவது இந்த நாட்டில் இதுவே முதல் தடவை என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் அவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Back to top button