இலங்கை

இலங்கையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள சேவைகள் குறித்து வெளியான அறிவிப்பு!

வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, ஆவணங்களுக்கு அங்கீகாரமளிக்கும் சேவைகள் மறு அறிவித்தல்வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம், கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவல்கள் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, மாத்தறை, கண்டி, குருநாகல் ஆகிய பிராந்திய அலுவலகங்களின் ஆவணங்களின் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்புப் பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல் வரும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தூதரகப் பிரிவு மிகவும் அவசரமான ஆவணங்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கும் நிலையில், கணினிக் கட்டமைப்பு சீராக்கப்பட்டவுடன், ஏனைய ஆவணங்களுக்கான பணிகள் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஏனைய தூதரக சேவைகள் எந்தவித தடங்கலும் இன்றி தொடர்கின்றன.

அதற்கமைவாக, பயனாளர்கள் தங்களுக்கான சேவைகள் குறித்து அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு 01 இல் உள்ள தூதரக விவகாரப் பிரிவு, – 0112 338 812

பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம் 0212 215 972

பிராந்திய அலுவலகம், திருகோணமலை 0262 223 182 அல்லது இறுதி இரு இலக்கங்களுக்கு பதிலாக 86 இனை பயன்படுத்த முடியும்.

பிராந்திய அலுவலகம், கண்டி 0812 384 410

பிராந்திய அலுவலகம், குருநாகல் 0372 225 931

Back to top button