இலங்கை
இலங்கையில் நீர் வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையின் காலியின் பல பகுதிகளுக்கு 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. குறித்த பகுதிகளில் நாளை(15.12.2023) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை விநியோகம் தடைப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. காலி ஹபுகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. இந்நிலையில் போபே, பொத்தல, ஹபுகல, ஹபராதுவ, பூஸ்ஸ, அக்மீமன மற்றும் ரத்கம ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.