உடல்நலம்

நீங்கள் பிராய்லர் கோழியை விரும்பி சாப்பிடுபவரா? ஆண்களே இனி உஷார்!

இன்று பலரும் பிராய்லர் கோழிகளையே விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடு்ம் இந்த இறைச்சியால் மனிதர்களின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

குழந்தைகள் அதிகமாக சாப்பிட்டால் அவர்கள் சிறிய வயதிலேயே பருவத்திற்கு வந்துவிடுகின்றனர் என்றும் ஆண்கள் சாப்பிட்டால் ஆண்மை பிரச்சினை ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் பிராய்லர் கோழி அதிகம் சாப்பிட்டால் ஆண்களுக்கு புரோஸ்டேட் என்ற புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி பிராய்லர் கோழிகள் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கின்றது. இதற்கு காரணம் என்னவெனில் கோழி சாப்பிடும் தீவனத்தில் அதன் அபரீமிதமான வளர்ச்சிக்கு ஹார்மோன் அதிகம் தேவை என்பதால், தீவனத்தில் அதிக ஹான்மோன் இருக்கின்றது.

இதனால் சாப்பிடும் நபர்களுக்கு உடல் எடை அதிகரிப்பதுடன், ஆண்கள் அதிகமாக சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்றும் பெண்களுக்கு கருப்பையில் பிரச்சினைகள் ஏற்படும் என்பது தெரியவந்துள்ளது.

ஆதலால் பிராய்லர் கோழிகளை இனி அதிகம் விரும்பி சாப்பிடாமல், நாட்டுக்கோழிகளை மட்டும் சாப்பிடுவது சிறந்ததாகும்.

Back to top button