பூரியை அதிகம் சுவைத்து சாப்பிடுபவரா? இந்த பிரச்சனை இருக்கு ஜாக்கிரதை
பூரி உணவை சாப்பிட மறுப்பவர்கள் யாரும் இருக்க முடியுமா என்ன? அந்தளவு சுவையை அது கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே..!
பூரியின் தீமைகள்
பூரியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சாப்பிடுவது என்றால் பலருக்கும் அலாதி பிரியம் தான். காலை, மதியம், இரவு என பூரி, உருளைக்கிழங்கை எப்போது கொடுத்தாலும் சாப்பிட ஒகே சொல்லி விடுவார்கள். ஆனால் உண்மையில் சில உணவுகளை கண்டிப்பாக காலை மற்றும் இரவு நேரங்களில் உண்பதை தவிர்க்க வேண்டும். இதனால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.
இரவில் சாப்பிட வேண்டாம்
ஆமாம்! பூரி உருளைக்கிழங்கை இரவு நேரத்தில் சாப்பிடவே கூடாதாம். ஏனென்றால் பூரியில் இருக்கு எண்ணெய் இரவு நேரத்தில் ஜீரன சக்தியை குறைத்து தொப்பையை ஏற்படுத்துவதோடு வேறு சில தொந்தரவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. ஆகவே இரவில் பூரி உருளைக்கிழங்கை சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது. மேலும் பூரியில் அதிகளவு எண்ணெய் உள்ளது, இதை தொடர்ந்து அடிக்கடி சாப்பிட்டால் இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது.