நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருந்து வேலை பார்ப்பவரா நீங்கள்?
உலகில் இருக்கும் அனைவருமே ஏதாவது ஒரு வேலை பார்ப்பார்கள். அதில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே வேலை பார்ப்பவர்கள் தான் அதிகம்.
உட்கார்ந்து வேலை பார்ப்பதால் நமக்கு என்ன பிரச்சினை வரப்போகிறது என்று யோசித்து இருப்போம்.
அவ்வாறு இல்லையாம் உட்கார்ந்த இடத்தில் இருந்தப்படியே வேலை பார்த்தால் அதிக நேரம் உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் பிரச்சினை வரும் என்று ஆய்வு கூறுகின்றது.
என்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று பார்க்கலாம்!!
உடல் எடை அதிகரிக்கும்.
இடுப்பு மற்றும் முதுகு வலி ஏற்படும்.
மனசோர்வு.
புற்றுநோய்.
இதய பிரச்சினை.
சக்கரை நோய் பிரச்சினை.
இவ்வாறு உடல் ரீதியாக பல பிரச்சினைகள் எற்படுகின்றன.
அதிலிருந்து தப்பி எவ்வாறு நமது உடலை பாதுகாக்க முடியும் என்று பார்க்கலாம்.
பாதுகாக்கும் முறை
உட்காரும் போது முதுகை நேராக வைத்து அமர வேண்டும்.
ஒரே இடத்தில் இருந்து வேலை செய்தால் சிறித நேரம் எழும்பி நடக்க வேண்டும்.
உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.