பிக் பாஸ் 7 முக்கிய போட்டியாளருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ள ஆரி.. யார் பாருங்க

பிக்பாஸ் 7ம் சீசன் ஷோ தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு காரணம் சமீபத்தில் நடந்த சர்ச்சையான விஷயங்கள் தான் காரணம். பிரதீப் ஆண்டனி காரணமாக வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாயா – பூர்ணிமா கேங் புகார் கொடுத்து அவரை வெளியேற்றிவிட்டனர். அது பற்றி தற்போது நெட்டிசன்கள் கமல்ஹாசன் மற்றும் பிக் பாஸ் நடத்துபவர்களையும் டரோல் செய்து வருகின்றனர்.
அர்ச்சனாவுக்கு ஆதரவாக ஆரி
பிக்பாஸ் வீட்டில் மாயா – பூர்ணிமா டீமுக்கு எதிராக தற்போது அர்ச்சனா களமிறங்கி இருக்கிறார். அதனால் அவருக்கு நாளுக்கு நாள் வெளியில் ஆதரவு கூடி வருகிறது. இந்நிலையில் அர்ச்சனாவுக்கு பிக் பாஸ் முன்னாள் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜூனன் ஆதரவு தெரிவித்து இருக்கிறார். அவர் X (டிவிட்டர்) தளத்தில் போட்டிருக்கும் பதிவு இதோ..
Archana you begin the game stay strong 💪 #BigBoss7tamil #VJArchana— Aari Arujunan (@Aariarujunan) November 7, 2023