சிங்களவர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து அன்றே எச்சரித்த தமிழன் – சிங்கள பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல்
ஈழ விடுதலைப் போராளியான குட்டிமணி சிங்களவர்கள் தொடர்பில் 40 வருடங்களுக்கு முன்னர் சொன்ன உண்மை தற்போது நிஜமாகியுள்ளதாக சமூக ஊடகவியலாளரான அபேஷிக்கா என்ற பெண்ணே ஊடகங்களுக்கு இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார். இலங்கையில் பிரபல யூரிப்பர்களில் ஒருவரான இந்த பெண்ணின் கருத்து அதிகமான சிங்களவர்களுக்கு சென்றுடைந்துள்ளது. பயங்கரவாத சட்டம் மூலம் தற்போது தமிழர்களை கொடுமைப்படுத்தும் அரசு, ஒருநாள் இதே சட்டம் மூலம் சிங்களர்களையும் துன்புறுத்தவார்கள் என குட்டிமணி தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1983ஆண்டு வெலிக்கடையில் உயிரிழக்க முன்னர் இதனைக் கூறியுள்ளார். 1981ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் கொலை செய்யப்பட்ட குட்டி மணி இவ்வாறான கருத்து ஒன்றை வெளியிடுகின்றார்.
மற்றவர்களின் சுதந்திரம் குறித்து அக்கறை செலுத்தாதவர்கள் தங்களின் சுதந்திரத்தை குழி தோண்டி புதைத்துக் கொள்வார்கள். தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையாக பயன்படுத்தவே இந்த பயங்கரவாத தடைச்சட்டம் என்ற மோசமான சட்டம் கொண்டுவரப்பட்டது.
எங்களுக்கு ஏற்பட்ட விதி இலங்கை சிங்களவர்களுக்கும் ஏற்படும் என்பதனை அனுதாபத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வடக்கில் மாத்திரம் இருக்கும் இந்த அநீதியான சட்டம் என்றாவது ஒரு நாள் தெற்கிற்கும் வரும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வெலிக்கடை வதை முகாம் ஹம்பாந்தோட்டைக்கு கொண்டுவரப்படும். குருநகர் வதை முகாம் குருநாகலுக்கு கொண்டுவரப்படும். இன்று தமிழ் இளைஞர்கள் சித்திரவதைக்குள்ளாகும் நிலைமை இனி சிங்கள இளைஞர்கள் அனுபவிக்க நேரிடும்.
இதனால் இன்று முதல் சுதந்திரத்திற்காக இந்த அநீதியான சட்டத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் என குட்டிமணி தெரிவித்தாக குறித்த சிங்கள பெண் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.