ஏனையவை

விண்வெளி வீரர் தேன் கலந்த உணவினை விண்வெளியில் உண்ட காட்சி இதோ!

புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கு உணவு உண்பது என்பது கடிமான விடயம். விண்வெளி வீரர்களுக்கு அதிகளவில் உலர் பழங்கள், பெரும்பாலும் திரவ நிலையிலான உணவு வகைகளே இதுவரைக்காலமும் வழங்கப்படுகிறது. புவியீர்ப்பு விசையே இல்லாத விண்வெளியில் உணவை சாப்பிடுவது என்பது மற்றொரு சவால். இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விண்வெளி வீரர் ஒருவர் வெளியிட்டுள்ள விண்வெளியில் சாப்பிடும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விண்வெளி வீரர் சுல்தான் அல்-நியாடி ஆறு மாதங்களாக விண்வெளிப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். விண்வெளி பயணத்தின் போது அவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) விண்வெளி வீரர்கள் எப்படி உணவு உண்கிறார்கள் என்பதை அவர் கூறியுள்ளார். இந்த வீடியோவில், அவர் தேன் தடவிய ரொட்டியை சாப்பிடுவதைக் காணலாம். வீடியோவைப் பகிரும் போது, ​​அவர் அதன் தலைப்பில், ‘விண்வெளியில் தேனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்னிடம் எமிராட்டி தேன் மீதம் உள்ளது, அதை நான் அவ்வப்போது சாப்பிடுகிறேன். இதன் நன்மைகள் பல நிறைந்தது. இது விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது’ என பதிவிட்டுள்ளார்.

Back to top button