இலங்கையில் வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளின் பட்டங்களை அங்கீகரிப்பது குறித்து கவனம்
வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளில் வழங்கப்படும் மருத்துவ பட்டங்களை அதிகளவில் அங்கீகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இது தொடர்பிலான சட்டமொன்றை உருவாக்குவதற்கு முனைப்பு காட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச ரீதியில் முதல் ஆயிரம் தரப்படுத்தல் நிலைகளில் காணப்படும் பல்கலைக்கழகங்களின் மருத்துவ பட்டத்தை அங்கீகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த சட்ட வரைவு உருவாக்கப்பட்டு சட்ட வரைவு திணைக்கிழத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதாக இலங்கை மருத்துவ பேரவையின் அதிகாரி ஒருவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் நேபாளம், பங்களாதேஷ் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவ கற்கைகளை பூர்த்தி செய்துள்ளனர். பங்களாதேஷின் மருத்துவ பல்கலைக்கழகங்களை கூடுதல் எண்ணிக்கையில் அங்கீகரிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் அண்மையில் பங்களாதேஷ் கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.