2024 ஆம் ஆண்டு நிகழவுள்ள சம்பவங்கள் குறித்து பாபா வங்காவின் கணிப்புகள்
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது. 1996ல் மரணமடைந்தார். இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது.
நிஜமான கணிப்புகள் செர்னோபில் அணு உலை விபத்து, இங்கிலாந்து இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் போன்றவை நிஜமாகியுள்ளன. இந்நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டில், அவர் ஏழு தீர்க்கதரிசனங்களைச் கூறியுள்ளார் என்று டெய்லி ஸ்டார் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கணிக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள் 2024ல் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல இயற்கை பேரழிவுகள் ஏற்படும். புற்றுநோய்க்கான தீர்வு கண்டுபிடிக்கப்படும். குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும். ரஷிய அதிபர் புதின் தனது சொந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகொலை செய்யப்படுவார். ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும். மேலும் ஒரு “பெரிய நாடு” அடுத்த ஆண்டு அணு ஆயுத சோதனைகள், தாக்குதல்களை நடத்தும். பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், மர்ம நோயால் பாதிக்கப்படுவார் சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும். ஹேக்கர்கள் மிகவும் அதிநவீனமாகி, பவர் கிரிட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைப்பார்கள் என கணித்து எச்சரித்துள்ளார்.