இலங்கை
யாழ்ப்பாணத்தில் இளம்பெண் செய்த மோசமான செயல்
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் 19 ஆயிரத்து ஐநூறு மில்லிலீட்டர் கசிப்புடன் 34 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) குறித்த பெண்ணின் வீட்டில் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.