ஏனையவை

தித்திக்கும் சுவையில் பாதுஷா: இந்த 2 பொருள் போதுமாம்!

பொதுவாகவே இனிப்பு வகையென்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் தீபாவளி நேரத்தில் செய்யப்படும் இனிப்புக்கு ஒரு சுவையே இருக்கும். ஆகவே அனைவருக்கும் மிகவும் பிடித்த பாதுஷாவை எப்படி இலகுவான முறையில் சுவையாக செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்– மைதா – 1 1/2 கப், வெண்ணெய் – 1/2 கப், சர்க்கரை – 1/4 ஸ்பூன், பேக்கிங் சோடா – 1/4 ஸ்பூன், தயிர் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – பொரிக்க, சர்க்கரை – 1/2 கப், தண்ணீர் – 1/2 கப் ,எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

செய்முறை – முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் சோடாவை சலித்து எடுத்துக்கொள்ளவும். பின் வேறு ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், தயிர், சர்க்கரை அனைத்தையும் கலந்து, அதனுடன் மைதா மா சேர்த்து மிருதுவாக பிசையவும். அடுத்து உருண்டையாக எடுத்து கட்டை விரலால் குழிபோல் உருட்டி, எண்ணெயில் பொறித்து எடுக்கவும். பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீர் வைத்து எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும். இறுதியாக பொறித்து வைத்ததை சர்க்கரை பாகுவில் ஊற வைத்து பரிமாறினால் சுவையான பாதுஷா ரெடி!

Back to top button