பாவா லட்சுமணனுக்கு பாலா செய்த நெகிழ்ச்சி செயல்!

பிரபல காமெடி நடிகரான பாவா லட்சுமணன் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது கால் விரல் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பல படங்களில் கொமடி நடிகராக வலம் வருபவர் தான் பாவா லட்சுமணன். இவர் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்துள்ள நிலையில், இவரது கொமடி காட்சி இன்றும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கக்கூடியதாகவே இருந்து வருகின்றது.
இதேவேளை, பாவா லட்சுமணன் சில ஆண்டுகளாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஓமந்தூரில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரின் கால் கட்டைவிரல் தற்போது அகற்றப்பட்டுள்ளது. இதனை அறிந்த பல பிரபலங்கள் அவருக்கு ஆறுதல் கூறிவரும் நிலையில், விஜய் டிவி பாலா நேரில் சென்று பணஉதவி அளித்துள்ளார். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க நினைத்த பாலாவின் வங்கிக்கணக்கில், 32 ஆயிரம் மட்டுமே இருந்துள்ளது. இதில் 2 ஆயிரம் பெட்ரோலுக்கு எடுத்துவிட்டு 30 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துள்ளார். இந்த நெகிழ்ச்சி காட்சியை அவதானித்த ரசிகர்கள் பாலாவை பாராட்டி வருகின்றனர்.