இலங்கை

நாட்டில் பிளாஸ்டிக் துடைப்பங்கள் இறக்குமதி செய்ய தடை

நாட்டில் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறை கண்காணிப்பு குழுவில், சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பெரும் பங்களிக்கும் பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமாறு இறக்குமதியை தடை செய்ய வேண்டும் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதன்படி, இது தொடர்பில் பரிந்துரைகள் மேற்கொள்ளப்படும் என மேற்படி குழுவின் தலைவர், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொறியியலாளர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கும் வகையில் லஞ்ச் ஷீட் பாவனையை தடை செய்வது தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இதேவேளை லஞ்ச் ஷீட்களை பயன்படுத்துவதை தடை செய்யுமாறு மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு குழு பரிந்துரைகளை வழங்கியது. அதை கடைபிடிக்க ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது

Back to top button