உடல் எடையை கிடுகிடுவென குறைக்கும் வாழைத்தண்டு சூப்: சுவையாக செய்வது எப்படி?
வாழைத்தண்டில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. அதில் உள்ள நார்ச்சத்து உங்களுடைய பசியை போக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைக்க உதவிசெய்யும். வாழைத்தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்தால், உங்கள் உடல் இயக்கம் ஆரோக்கியமாவதுடன், சீராக வைத்துக் கொள்ளலாம். சரி… உடல் எடையை குறைக்க வாழைத்தண்டு சூப் எப்படி செய்வது என்று பார்ப்போம் –
தேவையான பொருள்: நறுக்கிய வாழைத்தண்டு – 2 கப் தக்காளி – 2 எண்ணெய் – 4 தேக்கரண்டி சீரகம் – 2 ஸ்பூன் மிளகு – 10 சின்ன வெங்காயம் – 10 மிளகாய் வற்றல் – 4 மஞ்சள் தூள் – தேவைக்கேற்ப இஞ்சி – 2 துண்டு பூண்டு பல் – 4 கொத்தமல்ல, கறிவேப்பலை – தேவைக்கேற்ப தனியா – 1 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைத்தண்டை போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர், சீரகம், மிளகு, தனியா இதை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காள், மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை போட்டு பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கி எடுத்து ஆறவிட்டு, மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். வாழைத்தண்டு பாதி வெந்த பிறகு, அதில், அரைத்து வைத்த விழுது, சீரகம், மிளகு, தனியா பொடியை போட்டு, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான வாழைத்தண்டு சூப் தயார். வாரத்திற்கு 3 முறை இந்த வாழைத்தண்டு சூப் குடித்து வந்தால் உங்கள் உடல் எடை கிடுகிடுவென குறைய ஆரம்பிக்கும். ட்ரை பண்ணி பாருங்கள்.