ஏனையவை

மலச்சிக்கலை குணமாக்கும் வாழைத்தண்டு கொத்தமல்லி சூப்! எப்படி தயாரிப்பது?

பொதுவாக மலச்சிக்கல் பிரச்சனை ஆனது, நம்மில் பலரும் எதிர்கொள்ளக் கூடிய மிகவும் பொதுவான ஒன்றாகும். மேலும், உங்களின் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் நீங்கள் அதிலிருந்து விடுபடலாம். தற்போது மலச்சிக்கலை போக்க கூடிய வாழைத்தண்டு கொத்தமல்லி சூப் ஒன்றை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்

வாழைத்தண்டு – 1 துண்டு, கொத்தமல்லி – 1/2 கட்டு, மிளகுத்தூள் – 1 ஸ்பூன், சீரகத்தூள் – 1 ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் வாழைத்தண்டையும், கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். வடிகட்டியதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும். சுவையான வாழைத்தண்டு கொத்தமல்லி சூப் ரெடி

Back to top button