தினமும் ஒரு செவ்வாழை உண்பதால் கிடைக்கும் பலன்கள்
சிவப்பு நிற வாழைப்பழமான செவ்வாழையில் பொட்டாசியம், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதயத்திற்கு இரத்த விநியோகத்தை மேம்படுத்துவதில் செவ்வாழை முக்கிய பங்கு வகிக்கிறது.
பொட்டாசியம், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால், செவ்வாழையை தினமும் உட்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
பார்வைத் திறனை மேம்படும்
உடல்நலக் கோளாறுகளை நீக்கும் செவ்வாழை, கண்களின் பார்வைத் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
பல்வலி பிரச்சனைகளைப் போக்கும்
பல்வலி பிரச்சனைகளைப் போக்கும் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், பல்வலிக்காரர்கள், தினசரி இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
இதயத்தை ஆரோக்கித்திற்கு உதவும்
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்துடன் இதயத்திற்கு இரத்த விநியோகத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் செவ்வாழை உடலுக்கு உடனடியாக ஆற்றலை வழங்குகிறது.
குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்
கருவுற்றிருக்கும் பெண்களுக்கு செவ்வாழை ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். தினமும் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். உடலில் உள்ள வெப்பத்தை குறைக்கும் செவ்வாழை, நரம்புத் தளர்ச்சியால் அவதிப்படுபவர்களுக்கும் நிவாரணம் கொடுக்கும்.
செரிமானம் மேம்படும்
இவற்றைத் தவிர, செவ்வாழையை தொடர்ந்து உண்டு வருவதால் செரிமானம் மேம்படும். மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.