எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும் கருப்பு உளுந்து உருண்டை: எப்படி செய்வது?
பொதுவாக கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன.மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். கருப்பு உளுந்தை பயன்படுத்தி ஆரோக்கியமான மற்றும் சுவையான உருண்டை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
black gram/கருப்பு உளுந்து
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து- 1/2 கப்
வெள்ளை உளுந்து- 1/2 கப்
பொட்டுக்கடலை- 1 கப்
ஏலக்காய் தூள்- 1/2 ஸ்பூன்
நாட்டு சர்க்கரை- 2 கப்
நல்லெண்ணெய்- 1கப்
நெய்- 3 ஸ்பூன்
முந்திரி பருப்பு- 10
செய்முறை
முதலில் கருப்பு உளுந்து மற்றும் வெள்ளை உளுந்தை நன்கு கழுவி காயவைத்து பொன்னிறமாக வறுக்கவும்.
வறுத்த உளுந்தை ஆறவைத்து அதனுடன் பொட்டுக்கடலை, நாட்டு சர்க்கரை மற்றும் ஏழைக்கை தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
அரைத்த பவுடரை ஒரு பௌலில் சேர்த்து அதனுடன் நல்லெண்ணெய் மற்றும் நெய்யில் வறுத்து முந்திரியை சேர்த்து உருண்டையாக பிடிக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கருப்பு உளுந்து உருண்டை தயார்.