இலங்கை
பாக்கு நீரிணையை நீந்திக்கடந்து சிறுவன் நிகழ்த்திய புதிய உலக சாதனை

32 கடல் மைல் பாக்கு நீரிணையை நீந்திக்கடந்து 13 வயது ஹரிகரன் தன்வந்த் புதிய உலக சாதனை புரிந்துள்ளார். திருகோணமலை கடற்பரப்பில் 20 கிலோமீற்றர் தூரம் வரையான கடற்பரப்பில் நீச்சல் பயிற்சிகள் பெற்றுள்ளதோடு , கடந்த வாரம் இலங்கை – இந்திய கடற்படையினரின் எல்லைக்கோடு வரை சென்று நீச்சல் பயிற்சியினை ஹரிகரன் தன்வந்த் பெற்றிருந்தார்.
மேலும் பாக்கு நீரிணையை , 8 மணித்தியாலம் 15 நிமிடத்தில் நீந்தி கடந்து ஹரிகரன் தன்வந்த் உலக சாதனையை படைத்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு தனுஸ்கோடியிலிருந்து ஆரம்பித்த சாதனைப் பயணம் தலைமன்னாரை வந்து அடைந்தது. தன்வந்த் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.