பிரான்ஸ் பொலிசார் புலம்பெயர்வோரைக் கண்டு அஞ்சுவதாக பிரித்தானியா தெரிவிப்பு!
பிரான்ஸ் பொலிசார் ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்வோரைக் கண்டு அஞ்சுவதாக பிரித்தானிய எல்லை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளார்கள். தண்ணீரில் இறங்கியதும் முரட்டுத்தனம் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக்கால்வாய் நோக்கிச் செல்லும் புலம்பெயர்வோரை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், அவர்களுடைய படகுகளைக் கிழித்தும் தடுக்க முயல்கிறார்களாம் பிரான்ஸ் பொலிசார். அதாவது, அவர்கள் கரையிலிருக்கும்போது மட்டும்!
இருப்பினும், அவர்கள் தண்ணீருக்குள் இறங்கிவிட்டார்களென்றால், அதற்குப் பிறகு அவர்களை நெருங்குவதே கஷ்டம் என்கிறார்கள் அவர்கள் ஆம், ஆங்கிலக்கால்வாய்க்குள் இறங்கிவிட்டால், அதற்குப் பிறகு எப்படியாவது பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிடவேண்டுமென வெறியுடன் பயணிக்கும் புலம்பெயர்ந்தோரை தடுக்க முயன்றால், அவர்கள் தங்களைத் தாக்கக்கூடும் என அஞ்சுகிறார்களாம் பிரான்ஸ் பொலிசார் ஏனென்றால், படகில் ஏறியதும் முரட்டுத்தனமாக மாறிவிடுகிறார்களாம் புலம்பெயர்வோர். மிரட்டும் புலம்பெயர்வோர் தங்கள் படகுகள் தண்ணீருக்குள் இறங்கியபின் தங்களை நெருங்கும் பிரான்ஸ் பொலிசாரை புலம்பெயர்வோர் கத்தியைக் காட்டி மிரட்டுவதாகவும், பல பொலிசார் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே, பிரான்ஸ் பகுதியிலிருந்து பிரித்தானிய பகுதி நோக்கிப் பயணிக்கும் புலம்பெயர்வோர் படகுகளை மீட்பது கடினம் என்பதால், பிரான்ஸ் பொலிசார், பிரித்தானியா நோக்கிச் செல்லும் புலம்பெயர்வோர் படகுகள் பிரித்தானிய எல்லைக்குள் செல்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டே அந்த படகுகளுக்குப் பின்னால் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என கூறப்படுகிறது