ஆன்மிகம்இன்றைய ராசி பலன்

புதாதித்ய ராஜயோகம்: இன்னும் 10 நாட்களில் ஜாக்பாட் அடிக்க போகும் 3 ராசிக்காரர்கள்; இன்றைய ராசிபலன்

சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 8.12.2023, சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.06 வரை தசமி. பின்னர் ஏகாதசி. இன்று காலை 08.24 வரை அஸ்தம். பின்னர் சித்திரை. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.


மேஷம்
காலம் தாழ்த்தி எடுக்கப்படும் முடிவுகளால் நல்ல பலனை பெறுவீர்கள். கட்டுமானத் துறையில் புதிய காண்ட்ராக்ட்கள் எடுப்பீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அவசரம் காட்டாதீர்கள். பங்குச் சந்தை வியாபாரத்தில் பாதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு எதிராக சூழ்ச்சி பண்ணுவார்கள். வியாபாரத்தில் புதிய பொருட்களை அறிமுகப்படுத்துவீர்கள்.


ரிஷபம்
கைக்குழந்தைகளை சளி தொல்லையால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வீர்கள். தாய் மாமனிடம் சண்டை போடுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் சுணக்கத்தை காண்பீர்கள். அரசு வேலையில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். தனியார் துறையில் விடுமுறை கிடைக்காமல் தடுமாறுவீர்கள். கழுத்து வலியால் வேலை பார்க்க கஷ்டப்படுவீர்கள்.


மிதுனம்
விளையாட்டாக வாங்கிப்போட்ட நிலத்தை அதிக விலைக்கு விற்பீர்கள். புதிய ஆர்டர்கள் மூலம் நல்ல கமிஷன் பெறுவீர்கள். நீங்கள் கேட்ட பொருளை வெளிநாட்டில் இருந்து உங்கள் நண்பர் வாங்கி அனுப்புவார். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக எல்ஐசி பாலிசி எடுப்பீர்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் அமோக பலனைத் அடைவீர்கள். ஐடி ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவீர்கள்.


கடகம்
பகல் இரவு பார்க்காமல் குடும்பத்திற்கு பாடுபடுவீர்கள். உங்கள் உழைப்பை துணைவியார் புரிந்து கொள்ளாததால் மன வேதனைப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தை பாகப்பிரிவினை செய்யும்படி சகோதரரால் வற்புறுத்தப்படுவீர்கள். தேவையில்லாமல் பேசி ஊர்ப் பகையை இழுக்காதீர்கள். உங்கள் வார்த்தைக்கு பிள்ளைகள் கூட கட்டுப்பட மறுப்பதால் நிம்மதி இல்லாமல் தவிப்பீர்கள்.


சிம்மம்
வீட்டிற்கு வேண்டிய பொருட்களை வாங்கிப் போடுவீர்கள். இடம் வாங்கி மாற்றி விடுவதன் மூலம் இருமடங்கு லாபம் பார்ப்பீர்கள். உழைப்பால் உயரதிகாரிகளின் மனதைக் குளிர வைப்பீர்கள். ஆசைப்பட்ட நகைகளைப் பெண்கள் வாங்குவீர்கள். புதிய வாகனம் வாங்க பதிவு செய்வீர்கள். காதலியின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். ஐடி துறையில் அபார வளர்ச்சி அடைவீர்கள்.


கன்னி
வயிற்றுக் கோளாறால் பயணத்தைத் தள்ளிப் போடுவீர்கள். குடும்பத்தினருடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலையை சந்திப்பீர்கள். கேட்ட இடத்தில் இருந்து பணம் கைக்கு வர தாமதமாவதால் தொழிலை விரிவுபடுத்த சிரமப்படுவீர்கள். வேலைப்பளு காரணமாக ஐடி ஊழியர்கள் டென்ஷன் ஆவீர்கள்.


துலாம்
அடுத்தவரின் ஆலோசனையைக் கேட்டு அவசரப்பட்டு காரியத்தில் இறங்காதீர்கள் . ஆன்லைன் விளையாட்டுகளால் ஆபத்தில் சிக்குவீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் ஏமாற்றப்படுவீர்கள். வாங்கிய கடனைக் கொடுக்காவிட்டால் அவமானத்தைச் சந்திப்பீர்கள். வங்கி வேலைகள் தாமதமாக நடப்பதால் நிதானம் இழந்து கோபப்படுவீர்கள்.


விருச்சிகம்
நீண்டகாலமாக இழுபறியில் இருந்த தாய்வழிச் சொத்தை விற்பனை செய்வீர்கள். உங்களுக்கு உரிய பங்கை பெறுவீர்கள். தொழிலுக்குத் தேவையான அரசாங்க உதவியை அடைவீர்கள். மருத்துவர்கள், இன்ஜினியர்கள் அதிக லாபம் பார்ப்பீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் ஏற்றமாக இருப்பதால் அதிக முதலீடுகள் செய்து உற்சாகமடைவீர்கள்.


தனுசு
புதிய வீடு கட்டுவதற்கான ஏற்பாடு செய்வீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பாராத லாபம் பார்ப்பீர்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் ஆதாயம் அடைவீர்கள். ஐடி ஊழியர்கள் வருமானம் அதிகரித்து மகிழ்ச்சி அடைவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவீர்கள். மனைவி, பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.


மகரம்
நாக்கும் வாக்கும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஆத்திரப்பட்டு பேசி உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவீர்கள். தகப்பனாருக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். வெளியூர்ப் பயணங்களால் அதிக பயன் அடைய மாட்டீர்கள். உறவினர்களுக்காக விரயச் செலவு செய்வீர்கள். சறுக்கலை சந்திப்பீர்கள். தொழில் துறைகளில் போட்டிகள் ஏற்பட்டு சிரமத்திற்கு ஆளாவீர்கள்.


கும்பம்
எடுத்த காரியத்தில் ஏதாவது தடங்கலை சந்திப்பீர்கள். வெயிலின் கொடுமையால் உடல்நிலை பாதிக்கப்படுவீர்கள் . வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைய மாட்டீர்கள். அரசு ஊழியர்கள் வேலையை முடிக்க இரவு தூக்கத்தை தொலைப்பீர்கள். உங்களின் ஆத்திரத்தை குடும்பத்தில் காட்டாதீர்கள். சந்திராஷ்டமம் நாள். எச்சரிக்கை தேவை.


மீனம்
வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்காக கடன் வாங்குவீர்கள். பழைய பாக்கிகளை சிரமப்பட்டு வசூல் செய்வீர்கள். வியாபார மந்த நிலையால் மனம் பாதிப்படைவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் இழப்புகளை சந்திப்பீர்கள். பொறுப்புடன் வேலை பார்க்க வேண்டும். அரசாங்க அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

Back to top button