75 ஆவது சுதந்திர தினத்துக்கு 1000 பேருந்து சேவை
நேற்று (18.01.2023) பாராளுமன்றத்தில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு இணையாக மறுதினம் மேலும் 1,000 பேருந்து வண்டிகள் கிராமிய பொதுப் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படுமென தெரிவித்தார்.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கவுள்ள 225 பஸ் வண்டிகளுடன் பொது போக்குவரத்து துறையில் நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் பற்றாக்குறை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 800 பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அத்துடன் நேற்று நடத்த திட்டமிட்ட அமைச்சரவை உப குழுவினதும் அரச சேவைகள் உயரதிகாரிகளின் குழுவினதும் அனுமதியின் பிரகாரம் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களையும் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்களூடாக இந்த 1,000 பஸ் வண்டிகளை சேவையிலீடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.