ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ; KFCநிலையத்தில் திடீரென புகுந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையில் பழுதடைந்த கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து இராஜகிரியவில் உள்ள KFC விற்பனை நிலையத்தில், பொது சுகாதார பரிசோதகர்களால் அங்கிருந்த கோழி இறைச்சிகள் அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கூறுகையில், தாங்கள் உட்கொள்ளும் KFC கோழியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து முறைப்பாடு வந்ததாகக் கூறினார்.
இந்நிலையில், PHIக்கள் விற்பனை நிலையத்திற்கு விரைந்து சென்று பழுதடைந்ததாக நம்பப்படும் கோழி இறைச்சியை அப்புறப்படுத்தியதாக அந்த அதிகாரி கூறினார். அதேவேளை , மேலதிக விசாரணைகளுக்காக கோழியின் மாதிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் மேலும் மாதிரியின் முடிவுகளை வெளியிட குறைந்தது 10 நாட்கள் ஆகலாம் எனவும் KFCநிலையத்தில் சோதனை மேற்கொண்ட PHI அதிகாரிகள் தெரிவித்தனர்.