இலங்கை
மின்கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை கடந்த வாரம் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டநிலையில்
இம்மாதம் முதல் செலவு அடிப்படையிலான மின்சார கட்டணத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மின்சாரத் துறைக்கான பொதுக் கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளைத் திருத்துவதற்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக மின் சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதிக சதவீதத்தினால் மின்கட்டணம் அதிகரிக்கப்படவிருப்பதாக
இந்த முன்மொழிவு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினாலும் அது நடைமுறைப்படுத்தப்படாது என பொது பயன்பட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.