தித்திப்பான சுவையில் Caramel அரிசி பாயாசம்: செய்வது எப்படி?
பண்டிகை களங்களில் அல்லது ஏதேனும் வீட்டில் விசேஷங்கள் என்றல் உடனே நாம் செய்க்கூடிய ஒரு இனிப்பு வகை தான் இந்த பாயசம். இதுவரைக்கும் நாம் பால் பாயாசம், பருப்பு பாயாசம், சேமியா பாயாசம் போன்றவற்றை சாப்பிட்டிருப்போம். தற்போது சுவையான Caramel அரிசி பாயாசம்எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் – பச்சரிசி- 1/4 கப், பால்- 1 லிட்டர், சர்க்கரை- 1 கப், நெய்- 2 ஸ்பூன், உலர்ந்த திராட்சை- 2 ஸ்பூன், முந்திரி- 12, ஏலக்காய் தூள்- 1/2 ஸ்பூன்
செய்முறை முதலில் அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் பல் சேர்த்து கொதித்து வரும்போது அதில் அரைத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து வேக வைக்கவும். Caramel அரிசி பாயசம் அடுத்து வேறொரு பாத்திரத்தில் 1/4 கப் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் வைத்து Caramel தயார் செய்து அரிசி நன்கு வெந்து வந்ததும் அதில் ஊற்றி கிளறவும். அடுத்து அதில் 1/4 கப் சர்க்கரை ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை அனைத்தையும் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான Caramel அரிசி பாயாசம் தயார்.