இலங்கை

உடனடி நடைமுறைக்கு வரும் சட்டம்: வெளியானது அதிவிசேட வர்த்தமானி

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், ஊழல் எதிர்ப்பு சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதி சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபசவினால் 2023 ஏப்ரல் 27ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் கடந்த ஜூன் 21 மற்றும் ஜூலை 6ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது. இதன்படி 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டு கடந்த மாதம் உறுதிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button