இலங்கை
இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதியில் மாற்றம்!

நாட்டில் மூன்றாம் தவணைக்காக, நாடாளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளின் பகுதி 1 மற்றும் 2 ஆகிய இரண்டையும் இவ்வருடம் மீள நடத்துவதற்கு பரீட்சை திணைக்களத்தின் தீர்மானித்ததன் காரணமாக, தவணை ஆரம்பிக்கும் திகதி மாற்றப்பட்டுள்ளது. அதேவேளை விவசாய விஞ்ஞான வினாத்தாள் இரண்டாம் பகுதி பரீட்சை நடைபெறுவதற்கு முன்னரே வெளியானதால் அதனை இரத்துச் செய்ய பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.