ஏனையவை

5 நிமிடத்தில செட்டிநாடு பால் பணியாரம் ரெடி! இந்த ஒரு பொருள் இருந்தா போதும்

பொதுவாகவே நம்மிள் பலர் இனிப்பு வகைகள் என்றால் எப்போது வேண்டுமென்றாலும் சாப்பிடுவார்கள். அதிலும் வீட்டிலேயே செய்யக்கூடிய இனிப்பு வகை என்றால் சொல்லவா வேண்டும்? பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான ரெசிபியாகும். செட்டிநாடு ஸ்டைல் பால் பணியாரத்தை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், அவர்கள் வயிறு நிறைவதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியமும் வளம் பெறும் எனலாம்.ஆகவே வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு எப்படி சவையானதாகவும் வேலை குறைவாகவும் இருக்கக்கூடிய அளவில் பால் கொழுக்கட்டை செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1/2 கப்

உளுத்தம் பருப்பு – 1/2 கப்

தேங்காய் பால் – 1 கப்

காய்ச்சிய பால் – 1/4 கப்

ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்

உப்பு – 1 சிட்டிகை

சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் சேர்த்து 2 அல்லது 3 மணித்தியாலம் ஊற வைத்துக்கொள்ளவும்.

பின்னர் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து உப்பு சேர்த்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பின் ஒரு பாத்திரத்தில் காய்ச்சிய பால், ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.

இறுதியாக பொரித்து வைத்ததை அந்த கலவையுடன் சேர்த்து, 5-10 நிமிடம் ஊற வைத்து பின் பரிமாறினால் சுவையான செட்டிநாடு பால் பணியாரம் ரெடி!

Back to top button