இலங்கை

இலங்கை முழுவதும் நாளை சம்பள உயர்வு கோரி அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் இந்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த போராட்டமானது நாளை (30.10.2023) நடத்தப்படவுள்ளதாக தொழிற்சங்க சங்கத்தின் இணைப்பாளர் சந்தன சூரிய ஆராச்சி கூறியுள்ளார்.

அத்துடன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி, அலுவலக சேவைகள் மற்றும் மாகாண அரசாங்க சேவை உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்கவுள்ளதாக சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அடுத்த வாரத்திற்குள் தொழிற்சங்க முடக்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button