நாளை முடங்குமா கொழும்பு !
ஊழல் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட செனஹசே யாத்திரை இரண்டாவது நாளாக இன்று (20) தொடரவுள்ளது.
இந்த நிகழ்ச்சியை தீவிர மாற்றத்திற்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது.
கேகாலை, மாத்தறை, புத்தளம், அனுராதபுரம், பிபில, எம்பிலிபிட்டிய உள்ளிட்ட 6 இடங்களிலிருந்து செனஹசே யாத்திரை கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அதன் அமைப்பாளர் மஹில் பண்டார குறிப்பிட்டுள்ளார் .
செனஹசே யாத்திரை நாளை கொழும்பை வந்தடைய உள்ளது.
பாசத்திற்கான யாத்திரை
அதேவேளை அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக நடைபெறவுள்ள குறித்த யாத்திரை யாழ்ப்பாணம், மன்னார், காத்தான்குடி, கண்டி மற்றும் கதிர்காமம் ஆகிய ஐந்து இடங்களில் இருந்து ‘பாசத்திற்கான யாத்திரை’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது.
நேற்றையதினம் யாழ் நல்லூர் ஆலயத்தில் இருந்து பாசத்திற்கான யாத்திரை ஆரம்பமான நிலையில் எம்.ஏ.சுமந்திரன் ஐக்கிய மக்கள் கட்சியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் உட்பட கட்சியின் அமைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் நாட்டின் 5 இடங்களில் இருந்து நாளை ஆரம்பமாகும் ‘பாசத்திற்கான யாத்திரை’ 21 ஆம் திகதி கொழும்பை சென்றடையவுள்ளது.