ஏனையவை
பேராதனை பல்கலைக்கழக மானவர்களுக்கிடையேயான மோதல்; வைத்தியசாலையில் மூவர் அனுமதி

நேற்று (09) இரவு பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் பல் மருத்துவ பீட மாணவர்கள் காயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் மற்றும் பல் மருத்துவ பீட மாணவர்கள் ஆகிய இரு மாணவ குழுக்களிடையிலேயே நேற்றிரவு மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.