இலங்கை

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு; பொலிஸார் துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது. குறித்த சம்பவம் இன்று (2024.02.07) காலை இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் மறித்த பொழுது நிறுத்தாது அதிவேகமாக சென்ற டிப்பர் மீதே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Back to top button