உடல்நலம்

உடல் வலிமையை அதிகரிக்க உதவும் பருத்தி பால்: எப்படி செய்வது?

மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பானங்களில் ஒன்று இந்த பருத்தி பால். பருத்திப் பாலை வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் மற்றும் உணவுப் பாதையில் உள்ள புண்களை ஆற்றும். உடல் எடையை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி இதயத்திற்கு நன்மை அளிக்கவும், நெஞ்சு சளியை விரட்டவும் இந்த பருத்தி பால் பயன்படுகிறது. இந்த ஆரோக்கியம் நிறைந்த பருத்தி பாலை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பருத்தி விதை- 1 கப்
பச்சரிசி- 1/4 கப்
வெல்லம்- 3/4 கப்
ஏலக்காய் தூள்- 1/2 ஸ்பூன்
தேங்காய்- 1/2 மூடி
சுக்குப்பொடி- 1சிட்டிகை

செய்முறை
முதலில் பருத்தி விதையை கழுவி 12 மணி நேரம் ஊறவைக்கவும். அதன் பின் அரிசியை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

அதன் பின் பருத்தி விதையை ஒரு மிக்ஸியில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

பின் வடிகட்டிய சக்கயில் மறுபடியும் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அதன் பின் ஊறவைத்த அரிசியையும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு கடாயில் வடிகட்டிய பருத்தி பால் மற்றும் அரைத்து அரிசி மாவு சேர்த்து கலக்கவும். பின் இதனை மிதமான தீயில் அடுப்பில் வயித்து கைவிடாமல் கலக்க வேண்டும்.

இது நன்கு கொதித்து கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அதில் வெல்லம் சேர்த்து கரையும் வரை கிளறவும்.

இறுதியாக இதில் ஏலக்காய் தூள், சுக்குப்பொடி சேர்த்து இறக்கினால் ஆரோக்கியமான பருத்தி பால் தயார்.

Back to top button