இலங்கை
கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸ் விசேட குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட 17.5 மில்லியன் ரூபாய் பணம் தொடர்பிலேயே வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பொலிஸ் விசேட குற்றப் பிரிவிற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.