இலங்கை

பெற்றோருக்கு பிள்ளைகளின் இணையப் பயன்பாடு குறித்து குற்ற விசாரணைப் பிரிவு எச்சரிக்கை!

பாடசாலை மாணவர்களுக்கு மின்னஞ்சல்களை திறக்கும் போது பெற்றோரின் விபரங்களை கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குற்ற விசாரணைப் பிரிவினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோரின் விபரங்களை மின்னஞ்சல் முகவரியை உருவாக்கும்போது உள்ளீடு செய்வதன் மூலம், பிள்ளைகள் எந்தவொரு இணையத்தளத்திற்கும் பிரவேசிக்க சந்தர்ப்பம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிள்ளைகளின் சரியான விபரங்களை வழங்கும் போது, இணைய தளங்களுக்கு பிரவேசிக்கும்போது பொருத்தமற்ற இணையத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பம் தடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தொலைபேசிகளை பயன்படுத்தும் போது அவை இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டவையா என்பதனை பயனர்கள் உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவுக்கு உட்படுத்தப்பட்ட தொலைபேசியொன்றை குற்றச் செயலுக்காக பயன்படுத்தினால் அது பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Back to top button