வெறும் 10 நிமிடத்தில் மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு முறுக்கு !
பொதுவாகவே அனைவரும் மொறு மொறுவென சாப்பிடுவதை அதிகமாக விரும்புவார்கள். அதிலும் முறுக்கு என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியுமா? அந்தவகையில் உருளைகிழங்கு முறுக்கு ஒரு பிரபல்யமான பண்டமாகும். இதை நீங்கள் எந்த பண்டிகைக்கும் முயற்சி செய்து பார்க்கலாம். உருளைக்கிழங்கு முறுக்கு பச்சை அரிசி மாவு மற்றும் உருளைக்கிழங்கை முக்கிய பொருட்களாகப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதை எப்படி இலகுவான முறையில் குறைந்த நேரத்தில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு – 2 கப், உளுந்து – 2 கப், வெண்ணெய் – 2 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், உருளைக்கிழங்கு – 2, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையானளவு, தண்ணீர் தேவையான அளவு
செய்முறை
முதலில் உரலில் ஒரு டீஸ்பூன் மிளகை பாதியாக உடைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து உளுந்தை வறுத்தெடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். அதே போன்று உருளைக்கிழங்கையும் வேக வைத்து உரித்துக்கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மிளகு, உப்பு, உருக்கிய வெண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ளவும். அதன்பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடுப்படுத்திக்கொள்ளவும். முறுக்கு அச்சியில் முறுக்கை பிழிந்து எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொறித்தெடுத்தால் சுவையான உருளைக் கிழங்கு முறுக்கு தயார்!