உளுந்தே இல்லாமல் 15 நிமிடத்தில் மொறுமொறு Instant வடை: ரெசிபி இதோ
பொதுவாக பண்டிகை காலங்களில் அனைவர் வீடுகளிலும் இடம் பெறும் முக்கியமான உணவு வடை. காலை உணவாக இட்லி- வடை இதற்கு ஈடாக எந்த உணவையும் சொல்லமுடியாது. அதுவும் டீ குடிக்கும் நேரத்தில் டீயோடு வடை சாப்பிட்டாலே நிறைவாக இருக்கும். வடையை வெறும் 15 நிமிடத்தில் Instant வடையாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு- 1 கப்
தயிர்- 1/2 கப்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
வெங்காயம்- 1
பச்சைமிளகாய்- 2
கருவேப்பிலை- 2 கொத்து
கொத்தமல்லி- 1 கைப்பிடி
மிளகு- 1 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, தயிர், 2 கப், சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
கரைத்த மாவை ஒரு வாணலில் மிதமான தீயில் வைத்து உருண்டை பிடிக்கும் பதம் வரும்வரை கிளற வேண்டும்.
அதற்கு பின் மாவை அடுப்பிலிருந்து கீழே இறக்கி நன்கு ஆறவைக்க வேண்டும்.
அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து பிணைந்து வடைபோல் தட்டிக்கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெயை சூடுபடுத்தி தட்டி வைத்த வடையை எண்ணெயில் பொறித்து எடுத்தால் மொறுமொறு Instant வடை தயார்.