இலங்கை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் ஆபத்தான நோய்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி தொகையை அழிப்பதற்கு இலங்கை சுங்கம் இன்று (2023.12.29) காலை நடவடிக்கை எடுத்திருந்தது. பன்றி இறைச்சி, சொசேஜஸ் மற்றும் வாத்து இறைச்சி என்பன கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதியின்றி சீனாவில் இருந்து இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இதில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் என்ற நோய் நிலைமை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இறக்குமதி செய்யப்பட்ட குறித்த இறைச்சி தொகை, சந்தைக்கு விடுவிக்கப்படவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொதலாவல தெரிவித்துள்ளார்.

Back to top button